வெங்காயத்தை பதுக்கிவைப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபாவலியுறுத்தி. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா (சோலாப10ர் புனே) கர்நாடகா ,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 60 லாரிகள் வரை வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. தொடர் மழை மற்றும் சரி வர விளைச்சல் இல்லாததால் விவசாயிகளின் கையிருப்பில் உள்ள வெங்காயமே வந்து கொண்டிருந்தன. தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 லாரிகள் வரையே வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. விளைச்சல்-வரத்து குறைவு எதிரொலியாக வெங்காயத்தின் விலைகிடுகிடுவெனஉயர்ந்துள்ளது. கிலோரூபாய் 100 வரை சந்தைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெங்காயத்தை பயன்படுத்துவதில் குடும்ப பெண்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெங்காயத்தின் விலையை கேட்டு பெண்கள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி பிரியாணி உள்பட ஹோட்டல்களிலும் உணவு பண்டங்களின் விலையையும் ஏற்றி விற்பனை செய்யப்படும் நிலைக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். விளைச்சல் இல்லாததின் காரணமாகவும் தொடர் மழை காரணமாகவும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் வெளிசந்தையில் இருந்து வரும் வெங்காயத்தை பதுக்கி வைத்து செயற்கையான விலையேற்றத்தில் சிலர் ஈடுபடுவது காரணம் என தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துஅதன் மூலம் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய மாநிலஅரசுகள் ஈடுபடுவதோடு இதிலும் முறைகேடு நடைபெறாமல் நியாய விலைகடைகள் மூலம் வெங்காயத்தை விற்பனை செய்வதோடு தற்காலிக நடமாடும் வாகனங்கள் மூலமும் வெங்காயத்தை தமிழக அரசு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் விலை உயர்வு எனும் துன்பத்தில் தள்ளும் பதுக்கல்காரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு எதிர்காலத்தில் இது போன்று அத்தியவாசிய பொருட்கள் செயற்கை தட்டுப்பாடு விலை உயர்த்தப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

" alt="" aria-hidden="true" />

ஸ்ரீஹரிகோட்டா:

 

பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அளிப்பதற்காகவும், இந்திய எல்லைகளை கண்காணித்து தகவல் அளிக்கவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), கார்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்கள் இன்று பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

 

திட்டமிடப்பட்ட பாதையில் துல்லியமாக பயணித்த பிஎஸ்எல்வி சி47 ராக்கெட், பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததும், கார்டோசாட்-3 செயற்கைக்கோள் தனியாக பிரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் கார்டோசாட்-3 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் நானோ செயற்கைக் கோள்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டன.



இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பின்னர் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார்



Popular posts
மதுரை முத்துபட்டி பைக்காரா ஏழை எளிய மக்களுக்கு உதவிய C2 சுப்பிரமணியபுரம் காவல்துறையினர்
Image
மராட்டிய மாநிலம் மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
என்பிஆர் விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Image