அல்பேனியா நாட்டில் பயங்கர நிலநடுக்கம் - 50 க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்
அல்பேனியா நாட்டின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

 

இந்த நிலநடுக்கம் அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் இருந்து சுமார் 29 கி.மீ. தூரத்தில் உள்ள ஷிஜாக் என்ற இடத்திற்கு அருகில், 20 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.




 

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 




 

கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 45 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 650 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

அல்பேனியா நாட்டில் இன்று அல்பேனியா கொடியின் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்றைய கொண்டாட்டங்களை அல்பேனியா பிரதமர் எடி ரமா ரத்து செய்து, துக்க நாளாக அறிவித்துள்ளார்

Popular posts
மதுரை முத்துபட்டி பைக்காரா ஏழை எளிய மக்களுக்கு உதவிய C2 சுப்பிரமணியபுரம் காவல்துறையினர்
Image
மராட்டிய மாநிலம் மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
என்பிஆர் விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Image