மறுபுறம் சுயேட்சை வேட்பாளர்களும் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான முறைகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதால் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.
முதல்கட்ட தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதால் இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு குறிப்பிட்ட பகுதியில் வாக்காளர்களாக இல்லாதவர்கள், வெளியூரில் இருந்து வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் வீடு, வீடாக சென்று