இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் பொது மக்களுக்கு அளித்திருந்த பிரத்யேக அலைபேசி எண்ணுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து
காவல் துணை ஆய்வாளர் குணதீஸ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பாம்பன் தெற்கு கடற்கரையில் இருந்து தனிப் படகு மூலம் பாம்பன் அருகே உள்ள தீவுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ஒரு நாட்டுபடகை நோக்கிச் சென்றபோது அவர்கள் தங்கள் கையில் இருந்த ஒரு மூட்டையை கடலில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.