Vikram Lander: விக்ரம் லேண்டர் கிடைச்சிருச்சு!

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்யச் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ, கடந்த ஜூலை 22ஆம் தேதி அனுப்பி வைத்தது. சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டர், ஆர்பிட்டர், ரோவர் உள்ளிட்டவை ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.


இஸ்ரோ திட்டமிட்டிருந்தபடி, சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து ஆர்பிட்டர் நிலவை சுற்றிவரத் தொடங்கியது. தொடர்ந்து விக்ரம் லேண்டரும் நிலவில் தரையிறங்கத் தனது பயணத்தை தொடங்கியது. அதன்படி, செப். 7ஆம் தேதி தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்ரம் லேண்டருடனான தொடர்பு கிடைக்காமல் போனது.

பின் லேண்டர் குறித்த எந்த தகவலும் இஸ்ரோவுக்கு கிடைக்கவில்லை. பல்வேறு முயற்சிகளுக்குப்பின், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரோ அறிவித்தது. அதன்பின் இஸ்ரோ, நாசாவுடன் இணைந்து விக்ரம் லேண்டரை தேடத் தொடங்கியது.


இந்நிலையில், விக்ரம் லேண்டர் கீழே விழுந்த இடத்திலிருந்து வட மேற்கு திசையில் 750 மீட்டர் தொலை வரை சிதரல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைச் சுப்பிரமணியன் என்பவர் கண்டுபிடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது


Popular posts
மதுரை முத்துபட்டி பைக்காரா ஏழை எளிய மக்களுக்கு உதவிய C2 சுப்பிரமணியபுரம் காவல்துறையினர்
Image
மராட்டிய மாநிலம் மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
என்பிஆர் விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Image