சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. ஜனவரி மாதம் முழுக்க விலையேற்றம் காணப்பட்ட நிலையில் இந்த மாதம் சற்று ஆறுதலாக விலை குறைந்திருக்கிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை!
இன்று (பிப்ரவரி 3) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,911 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.3,922 ஆக இருந்தது. நேற்றைய விலையிலிருந்து இன்று 11 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 31,376 ரூபாயிலிருந்து இன்று 31,288 ரூபாயாகக் குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது.